பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/60

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

57


ஆலமரம் சிரித்தது; “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டது அரசமரம்.

ஆலமரம் சொல்லிற்று: “ உனக்கும் எனக்கும் உள்ள இடத்திலேயே உணவு கிடைப்பதுபோல் அவற்றுக்கும் கிடைத்தால், அவை யும் நன்றியுள்ள ஜீவன்களாய்த்தான் இருக்கும்!”


44. ஆஹா, மனிதன்!

“சின்ன மீனைப் பெரிய மீன் விழுங்கி வாழ்வதும், பெரிய மீனை அதற்கும் பெரிய மீன் விழுங்கி வாழ்வதும்...... சீசீ! இப்படித் தன் இனத்தைத் தானே உண்டு வாழும் ஈன ஜன்மம் இந்த உலகத்தில் வேறு ஒன்றும் கிடையாது!” என்றது ஒரு நாள் ஒரு மீன், தன்னைத்தானே நொந்துகொண்டு.

“ஏன், மனிதன் இல்லையா?” என்றது இன்னொரு மீன்.

“அவன் எங்கே தன்னைத் தானே சாப்பிடுகிறான்?” என்றது அது.

“ஏன் சாப்பிடவில்லை? நாம் தெரிந்து சாப் பிட்டால், அவன் தெரியாமலே சாப்பிட்டு விடுகிறான்” என்றது. இது!