பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45. அன்பு


அருகிலிருந்த ஒரு கொழுகொம்பைப் பற்றிப் படர்ந்தது ஒரு கொடி.

"ஆஹா உனக்கு என்மேல் என்ன அன்பு, என்ன அன்பு அப்படியே இறுகத் தழுவிக்கொண்டு விட்டாயே?" என்றது கொம்பு.

"அட, பாவமே! இப்படித்தான் ஏமாந்து விடுகி றார்கள் சிலர்!" என்றது கொடி அனுதாபத்துடன்.

"அது எப்படி?" என்று கேட்டது கொம்பு, ஒன்றும் புரியாமல்.

"அவர்களுக்கும் உனக்குத் தெரியாததுபோல்தான் அன்புக்கும் சுயநலத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரிவ தில்லை!" என்றது கொடி.

號。號

46. உபதேசம்

ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர் கொடாக்கண்டன்; இன்னொருவன் விடாக்கண்டன்.

ஒருநாள் மழை "சோ" வென்று பெய்து கொண் டிருந்தது. விடாக்கண்டன் கொடாக்கண்டனை நோக்கி, 'கடைத் தெருவரை அவசரமாகப் போகவேண்டி யிருக்கிறது; உன்னுடைய குடையைக் கொஞ்சம் இரவல் தருகிறாயா?’ என்று கேட்டான்.

"நண்பா, வேறு யாராவது இப்படிக் கேட்டிருந்தால் அவர்கள் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் என்று