பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


நான் குடையைக் கொடுத்திருப்பேன். ஆனால் உனக்குக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை. ஏனெனில், உன்னுடைய கால்களைக் கொண்டே நீ நிற்கப் பழக வேண்டுமென்பது என் விருப்பம். என்ன இருந்தாலும் நீ என் ஆருயிர் நண்பனல்லவா? இன்று நான் உனக்குக் குடை கொடுப்பதாக வைத்துக்கொள்; இரவல் குடை யிலேயே காலந்தள்ளி விடலாம் என்ற தவறான எண்ணத்துக்கு நீ ஆளாகிவிடுவாய். அதனால் உன் கால் களின் மீதே உனக்கு நம்பிக்கை இல்லாமற் போய்விடும். அந்த நிலைக்கு உன்னைக் கொண்டுவரவா உனக்கு நான் நண்பனானேன்?-வேண்டாம் நண்பா, இன்று நீ மழையில் நனைந்தே போ! அப்போது உனக்கென்று ஒரு குடை உனக்குச் சொந்தமாயிருக்க வேண்டியதின் அவசி யத்தை நீ உணர்வாய்!” என்றான் கொடாக்கண்டன்.

விடாக்கண்டன் போய்விட்டான்.

இன்னொரு நாள் அவர்கள் இருவரும் அந்த ஊர் தபாலாபீஸில் சந்தித்தார்கள். "ஒரு நிமிஷம் உன்னுடைய பேனான்வைக் கொடு; மேல் விலாசத்தை எழுதி விட்டுத் தருகிறேன்!” என்றான் விடாக்கண்டன்.

"முடியாது நண்பா, முடியாது. இன்றைக்குக் கொடுத்தால் நீ நாளைக்கும் கேட்பாய்; நாளை மறு நாளும் கேட்பாய்! இப்படியே உன் வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருப்பாய்!” என்று வழக்கம்போல் தன் உபதேசத்தை ஆரம்பித்தான் கொடாக்கண்டன்.

"இல்லை நண்பா, இந்தத் தடவைமட்டும் கொடு; இனிமேல் உன்னைக் கேட்கவில்லை...... "

"என்னைக் கேட்காவிட்டால் இன்னொருவனைக் கேட்பாய்!-ஐயோ, எடுத்தற்கெல்லாம் நீ பிறரிடம் பல்லைக்காட்டிக் கெஞ்ச வேண்டுமா? அருவருக்கத்