பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


இருக்கிறது? - எங்கேயாவது பாம்பின் கால் பாம்புக்குத் தெரியாமல் போய்விடுமா?" என்றான் சுந்தரபுருஷனும் சிரித்துக்கொண்டே.

அவனுடைய சிரிப்பைப் பொருட்படுத்தாமல் குடியானவன் சட்டென்று குடிசைக்குள் நுழைந்தான்; கையில் ஒரு காலிப்பானையுடன் விடுவிடு வென்று வெளியே வந்தான்.

"என்ன இது!" என்று திடுக்கிட்டுக் கேட்டான் சுந்தரபுருஷன்.

"இந்தப் பானையிலே சோறிருந்தா, எந்த நெலவு என்னை என்ன பண்ணுங்க? இந்நேரம் நல்லாதுங்கிப் போயிருக்க மாட்டேனுங்களா?" எனறான் அவன் அடி வயிற்றைத் தடவிக்கொண்டே.

號。浙。浙

49. அனுதாபம்

மனத்தை மயக்கும் மாலை நேரம். நவநாகரிகமாக உடை அணிந்திருந்த ஒருவன் தன்னையும், தன் அழகையும் கண்டு எத்தனை நாரீமணிகள் பெருமூச்சு விடுகிறார்கள் என்று வழி நெடுக உயர்ந்து நிற்கும் மாட மாளிகைகளைக் கவனித்துக்கொண்டே சென்றான். அந்தப் பொல்லாத நாரீமணிகளோ அனைக் கண்டு தாங்கள் பெருமூச்சு விடுவதற்குப் பதிலாகத் தங்களைக் கண்டு அவனையே பெருமூச்சு விடச் செய்தார்கள்!

இந்த லட்சணத்தில் வழியில் கிடந்த ஒரு வாழைப் பழத் தோலை அவன் கவனிக்கவில்லை; அதன் மேல் காலை வைத்துவிட்டான்.