பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



55. காதல்

அந்தி மயங்கிக் கொண்டிருந்தது; இருள் கவிந்து கொண்டிருந்தது-எல்லாப் புள்ளினங்களும் தங்கள் தங்கள் கூடுகளைத் தேடி வந்து சேர்ந்து விட்டன. எங்கும் நிசப்தம்.

அந்த நிசப்தத்தில் ஒரே ஒரு குயில்மட்டும் "குக்கூ குக்கூ!" என்று கூவிக்கொண்டே இருந்தது.

"இந்தக் குயில் ஏன்தான் இப்படி ஓயாமல் கூவுகிறதோ, தெரியவில்லை!" என்று தனக்குள் முணு முணுத்துக் கொண்டது ஒரு மயில்.

உலகம் இருளில் மறைந்தது; வானத்தில் நட்சத் திரங்கள் தோன்றி மின்னின-அப்பொழுதும் குயில் கூவுவதை நிறுத்தவில்லை.

என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் மயில் மேலுங் கீழுமாகப் பார்த்தது. பிறகு, "இவ்வளவு நேர மாகியும் இந்தப் பாழும் குயிலுக்குத் தூக்கம் பிடிக்க வில்லையே!" என்று தனக்குத்தானே அது வெறுப்புடன் கூறிக்கொண்டது.

வெள்ளி முளைத்தது; வானம் வெளுத்தது; புள்ளினங்கள் குதுகலத்துடன் சிறகடித்துக் கூவினஅப்பொழுதும் குயில் கூவுவதை நிறுத்தவில்லை; தொடர்ந்து கூவிக்கொண்டே இருந்தது.

ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது மயிலுக்கு. பொழுது விடிந்ததும் அது நேரே குயிலிடம் சென்று, "ஏன் இப்படி ஓயாமல் ஒழியாமல் கூவிக்கொண்டே இருக்கிறாய்?" என்று கேட்டது.

"நான் என்ன செய்வேன்? என் காதலர் என்னை விட்டுப் பிரிந்துவிட்டார். அவருடைய பிரிவை