பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


"நீ இருந்த இடத்தில் இனி நான் இருப்பேன்; உன்னைத் தரித்த மன்னர் இருந்த இடத்தில் இனி என் முதலாளி இருப்பார்!-அப்புறம் கேட்க வேண்டுமா? ஜனநாயகம் பணநாயகமாகும்; அந்தப் பணநாயகத்திலே உன்னைப் பழி வாங்கிய மக்கள் பசி, பசி என்று பதறித் துடிப்பார்கள்!"

"அதற்கும் இன்கம்-டாக்ஸ்" என்று ஒன்று குறுக்கே நிற்கிறதே, நண்பா!"

"அதனால் எனக்கென்ன குறை? அதோ இருக்கிறான் பார் லாபம், அவன்தான் ஓரளவு அதற்கு இரையாவான்! - அதுவும் எப்படி? கிட்டவா, சொல்கிறேன் லஞ்சமாக!"

“லஞ்சமா!"

"ஆமாம், ஜனநாயகத்தில் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக என் முதலாளியிடம் அரசாங்க அதிகாரிகள் வாங்கும் லஞ்சத்துக்கு 'இன்கம்-டாக்ஸ்’ என்று பெயர் - இது ரகசியம் - இப்பொழுதாவது புரிந்ததா, உனக்கு?”

"புரிந்தது நண்பா, புரிந்தது!’ என்று தலையை ஆட்டிற்று மணிமகுடம்.

மூலதனம் சிரித்தது. அதுதான் சமயமென்று, "வாழ்க பணநாயகம், வீழ்க ஜனநாயகம்!' என்று லாபம் முழங்கவே, பலே, அப்படிச் சொல்லு!" என்று அதன் முதுகில் ஒரு தட்டுத் தட்டிக் கொடுத்துவிட்டு, "சலோ கஜானா!" என்றது மூலதனம்.

“வெல்க, வாழ்க!" என்று அவற்றை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தது மணிமகுடம்.

荔,荔,荔