பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58. தன்னம்பிக்கை

ஒரு நாள் நாட்டுப் பசு ஒன்று, வழி தவறிக் காட்டுக்குச் சென்றுவிட்டது. நீண்ட நேரம் அலைந்து திரிந்தும் அங்கிருந்து வீட்டுக்குத் திரும்ப அதற்கு வழி தெரியவில்லை. அலைந்தலைந்து நாவறண்ட அந்தப் பசு, கடைசியாக ஒரு குளக்கரையில் நின்று தண்ணிர் குடித்துக் கொண்டிருந்தது.

அப்போது அங்கே வந்த புலி ஒன்று அதைக் கண்டதும், 'ஆஹா! பசு, நல்ல பசு நாட்டுப் பசு, கொழுத்த பசு!" என்று நாக்கைச்சப்புக் கொட்டிற்று.

பசு தலையைத் தூக்கி, ஏ, அறியாமை நிறைந்த புலியே! நீயும் நானும் ராமராஜ்யத்தில் எப்படி இருந்தோம், தெரியுமா? என்று ஆராய்ச்சி பூர்வமாக ஆரம்பித்தது.

தெரியாது, அறிஞரே!” என்று தன் அறியாமையைக் கொஞ்சங்கூடக் கூசாமல் காட்டிக் கொண்டது புலி.

‘'வேண்டுமானால் நாட்டுக்கு வந்து பார்! அங்கே உன்னையும் என்னையும் வைத்து எங்கள் சைத்திரிகர்கள் எவ்வளவு அற்புதமான படங்களை வரைந்திருக்கிறார்கள், தெரியுமா?"

"இருக்கலாம், படத்தில்-அதனாலென்ன?”

நமக்குப் பெருமையில்லையா?”

"இதில் நமக்கென்ன பெருமை? - ராமனுக்கென்று சொல்லு; அதைத் தீட்டிய சித்திரக்காரனுக்கு என்று சொல்லு!"

இவ்வளவுதானா நீ? - உன்னையும் என்னையும் போல் இன்று ஒற்றுமையின்றி இருக்கும் முதலாளி