பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


களுக்கும் தொழிலாளிகளுக்குங்கூட அங்கே நாமல்லவா உதாரண புருஷர்களாய் விளங்கி வருகிறோம்?" "இருக்கட்டும், இருக்கட்டும்-எல்லாம் வெறுங் கனவில்தானே நடக்கிறது?”

"இல்லை. நிஜமாகத்தான் - அந்தக் காலத்தில், நீயும் நானும் ரொம்ப ரொம்ப ஒற்றுமையாயிருந்தோமாம்; ஒரே குளக்கரையில் நின்று ஒன்றாகவே தண்ணீர் குடித்தோமாம்!"

"நல்ல கற்பனை"

"காலம் அதைக் கற்பனையாக்கலாம். இருந்தாலும் அந்த அதிசயக் காட்சியை அன்று நேரில் பார்க்கக் கொடுத்து வைக்காதவர்களெல்லாம் இன்று ஆயிரக் கணக்கில் செலவு செய்து அதைப் படங்களில் பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் என்னவோ உண்மை!”

"ஏன் உண்மையாயிருக்கக் கூடாது? அதுதான் பரஸ்பரம் லாபகரமான வியாபாரமாயிருக்கிறதே!”

"எது?”

"படம் வரைவதும்; அதை விற்பதுந்தான்" இதைக் கேட்டதும், "சீசீ, கொஞ்சங்கூட ரஸிகத் தன்மை இல்லையே, உனக்கு?" என்று முகத்தைச் சுளித்தது பசு.

"என் ரஸனையெல்லாம் இப்போது உன்னைக் கொன்று தின்பதில்தான்!” என்று புலி அதை மெல்ல நெருங்கிற்று.

"ஐயோ, வேண்டாம்-பாவம்"

"ரொம்ப சரி, என் வயிற்றைத் திருப்திப்படுத்தி நீயாவது புண்ணியத்தைச் சம்பாதித்துக்கொள்!" என்றது புலி.