பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/91

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

88


"கூடாது; என்னால் நீ பர்வியாகக் கூடாது" 'முடியாது; உன்னால் நான் பசியோடிருக்க முடியாது!”

"அடராமா, உன்னை நம்பிய எனக்கா இந்தக் கதி?” என்று புலம்பிற்று பசு.

"உனக்கென்ன, தன்னை நம்பாத எவனுக்குமே இந்தக் கதிதான்!-நீ மட்டும் அவனை இவனை நம்பாமல் உன்னையும் உன் கொம்புகளையும் நம்பியிருந்தால், இந்நேரம் என்னை விரட்டியிருக்கலாமே!" என்று அதன்மேல் பாய்ந்துவிட்டது புலி.

あああ

59. மண்ணின் கேள்வி

"எனக்கு மட்டும் ஒரு காணி நிலம் சொந்தமா யிருந்தால் கஞ்சிக்கு ஏன் காற்றாய்ப் பறக்கப் போகிறேன்?" என்று தன்னைப் பார்க்கும் போதெல்லாம் குடியானவர்கள் பலர் பெருமூச்சு விடுவதைக் கண்ட மண்ணுக்கு அதன் காரணம் என்னவென்று விளங்க வில்லை. ஒரு நாள் அது காற்றை நோக்கி, "காற்றே, காற்றே! நீ எல்லோருக்கும் சொந்தமாயிருக்கிறாயே, நான் ஏன் சிலருக்கு மட்டும் சொந்தமாயிருக்கிறேன்?" என்று கேட்டது.

"அது என்னவோ போ, எனக்கு வேலை தலைக்கு மேல் கிடக்கிறது!" என்று சொல்லிவிட்டுக் காற்று மேலே சென்றுவிட்டது.

அடுத்தாற்போல் நெருப்பை நோக்கி, "நெருப்பே, நெருப்பே! நீ எல்லாருக்கும் சொந்தமாயிருக்கிறாயே,