பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89


நான் ஏன் சிலருக்கு மட்டும் சொந்தமாயிருக்கிறேன்" என்றது கேட்டது மண்.

"அது என்னவோ போ, உனக்குப் பதில் சொல்ல என்னால் முடியாது!" என்று சொல்லிவிட்டு நெருப்பு சாம்பலாகி விட்டது.

"சரி, நீரையாவது கேட்டுப் பார்ப்போம் என்று எண்ணி, "நீரே நீரே! நீ எல்லாருக்கும் சொந்தமா யிருக்கிறாயே, நான் ஏன் சிலருக்கு மட்டும் சொந்தமாயிருக்கிறேன்?" என்று கேட்டது மண்.

"என்னைக் கேட்காதே; உன் கணவனைக் கேள்!" என்று நிற்க நேரமில்லாமல் நீர் ஓடிவிட்டது.

கடைசியாக விண்ணை நோக்கி, “இங்கே பாருங்கள், உங்களைத்தான்! நீங்கள் எல்லாருக்கும் சொந்தமாயிருக்கிறீர்களே, நான் ஏன் சிலருக்கு மட்டும் சொந்தமாயிருக்கிறேன்?" என்று கேட்டது மண்.

"போடி, பைத்தியமே! உன்னிடம் இருக்கும் பொன்னை நீ ஏன் மனிதனுக்குக் காட்டினாய்? அதனால் தான் எங்களைப்போல் உன்னால் எல்லாருக்கும் சொந்த முடியவில்லை!" என்றது வானம்.

荔,荔,荔

60. தனித்தன்மை

"திருவிழாவில் இன்று ஏகக் கூட்டம்" என்றது நாதசுரம்.

"ஆமாம், ஆமாம்!” என்று ஒத்து ஊதிற்று ஒத்து. "யாரால் கூட்டம், தெரியுமா? என்னால்தான்!" என்று பீற்றிக்கொண்டது தவுல்.