பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


"சரிதான்; இங்கே உள்ளவர்களால் என் தாளத்தை ரசிக்க முடியவில்லை!" என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தது அது.

"தாளம் போட்டால்தானே ரசிப்பதற்கு?" என்று இடித்துக் காட்டிற்று இது.

அதற்குள் மற்ற வாத்தியங்கள் அனைத்தும் வாசிப்பதை நிறுத்திவிட்டு, அவற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டன.

அவ்வளவுதான்; வெட்கத்தால் தலை குனிந்த தாளங்களில் ஒன்று இன்னொன்றைப் பார்த்துப் பின் வருமாறு சொல்லிற்று:

"என்னை மன்னித்து விடுங்கள்; எல்லாராலும் தனித்து இயங்க முடியாது என்பதை நான் இன்றுதான் உணர்ந்தேன்"

荔,莎,荔

61. தொண்டு

மழையில் நனைந்து வந்த குடும்பத் தலைவர் ஒருவர், செருப்போடு குடையையும் மூடி நடையில் வைத்துவிட்டு உள்ளே சென்றார்.

அவருடைய தலை மறைந்ததும், "அப்பாடா, இன்றுதான் என் கவலை தீர்ந்தது!" என்று சொல்லி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டது செருப்பு.

"அப்படி என்ன கவலை உனக்கு?" என்று குடை கேட்டது.

"இந்த வீட்டுத் தலைவருக்கு நீ செய்வதும் தொண்டு தான்; நான் செய்வதும் தொண்டுதான், ஆனால்