பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


இத்தனை நாளும் உன்னை மதித்து வந்தது போல் அவர் என்னை மதித்து வந்தாரா?"

"ஏன், மதிக்காமல் என்ன செய்தாராம்?"

"எங்கே மதித்தார்?...உனக்கு உள்ளே இடங் கொடுத்தால் எனக்கு வெளியே இடங் கொடுப்பார்!"

"இன்று?"

"நீயும் நடையில்; நானும் நடையில்-இதைப் பார்க்க எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது, தெரியுமா?"

இதைக் கேட்டதும் குடை "இடியிடி" என்று சிரித்தது; "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டது. செருப்பு.

"உன்னுடைய மகிழ்ச்சி இன்னும் கொஞ்ச நேரத்திற் கெல்லாம் அற்ப மகிழ்ச்சியாகப் போய்விடப் போகிறதே என்றுதான் சிரிக்கிறேன்!”

"அதுதான் இல்லை!"

"எதுதான் இல்லை?"

"என்னுடைய மகிழ்ச்சி அற்ப மகிழ்ச்சியாகப் போவதில்லை-இனி நீயும் ஒன்றுதான்; நானும் ஒன்று தான். உன்னுடைய சேவையும் ஒன்றுதான்; என்னுடைய சேவையும் ஒன்றுதான்!"

"கொஞ்சம் பொறு; என் மேலிருக்கும் தண்ணிர் வடியட்டும்!' என்றது குடை.

செருப்புக்கு ஒன்றும் புரியவில்லை.

"தண்ணிரா?" என்று வியப்புடன் கேட்டவாறு வாயைப் பிளந்தது. அதே சமயத்தில் வீட்டுக்குரியவர் வந்தார். "இதோ அவரும் வந்து விட்டார்; என்ன நடக்கிறதென்று பார்” என்றது குடை.

அவ்வளவுதான்; வந்தவர் தண்ணீர் வடிந்த குடையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார்.