பக்கம்:விந்தன் குட்டிக் கதைகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


ஏமாற்றமடைந்த செருப்பு தனக்குத் தானே சொல்லிக் கொண்டது. "செய்யும் தொண்டு ஒன்றா யிருந்தாலும், அதன் மதிப்பு செய்பவர்களைப் பொறுத்துத்தான் இருக்கும்போலிருக்கிறது!"

荔,渤,荔,


62. நீதி

பென்சில் சீவிய கத்தியைப் பேனாவுக்கு அருகே வைத்தார். ஒரு நீதிபதி, அந்த கத்தியைக் கண்டதும் அருவருப்புடன் ஒதுங்கி, "போ, எட்டிப்போ!" என்றது பேனா.

"என்ன கேடு, உனக்கு? என்னை ஏன் இப்படி விரட்டுகிறாய்?" என்று கத்தி கேட்டது.

"உன்னைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. உன் மேல் ரத்த வாடை வீசுகிறது!" என்றது அது;

"இப்பொழுது நான் பென்சிலைத்தானே சீவி விட்டு வந்தேன்?" என்றது இது.

"பேசாதே ஒரு மாணவன் கையில் இருக்கும் போது பென்சிலைச் சீவுகிறாய்; கொலைகாரன் கையில் இருக்கும் போது நீ எவன் தலையையாவது சீவுகிறாய்!"

"நீயும் அப்படித்தானே?-மாணவன் கையில் இருக்கும்போது பாடம் எழுதுகிறாய்; இதோ இருக்கிறாரே, இந்த நீதிபதியின் கையில் இருக்கும்போது ‘தீர்ப்பு’ என்ற பேரால் எவனையாவது தூக்கில் போடச் சொல்லி எழுதுகிறாய்!"