பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளம்பர வெளிச்சம்

நம் மக்கள் பெரும்பாலும் விளம்பர வெளிச்சத்தில் மின்னுகிறவர்களையே பெரியவர்கள்-திறமையானவர்கள். அறிஞர்கள் என்று எண்ணி மயங்குகிறார்கள். அவர்களை விமரிசனம் செய்வதே பாவம் என்று கருதுகிறார்கள். இந்த நம்பிக்கையை உடைக்க வேண்டும் என்பதற்காகவே 'முன்னும் பின்னும்' என்று ஒரு நூலினை எழுதி வருகிறேன். இது தனிநபர் துதிகளை மட்டுப்படுத்தும்.

நான் பாரதிதாசனைப் பெரிதும் மதிக்கிறவன்தான்... ஆனால், அவரை விட முற்போக்கானவர்கள். சீர்த்திருத்த வாதிகள் அவருக்கு முன்பே இருந்திருக்கிறார்கள் என்று சொல்வதே தவறாகி விடாது.

பாரதிதாசன் ஆரம்பகாலத்தில் ஆஸ்திகவாதியாக இருந்தார். அவர் வெளியிட்ட முதல் நூலே மயிலம் சுப்ரமணிய துதியமுது என்பதுதான். பல ஆண்டுகளுக்குப் பின்னால்தான் பகுத்தறிவு வெளிச்சம் அவருக்குக் கிடைக்கிறது. ஆனால், அவருக்கு முன்பே பாஸ்கரதாஸ் (வெள்ளைச்சாமி தேவர்) என்ற சினிமாப் பாடலாசிரியர் முற்போக்குச் சிந்தனை மிக்கவராக இருந்திருக்கிறார். 1921-ம் ஆண்டே, இந்து தேசாபிமானிகள் செந்தமிழ் திலகம்’ என்ற தேசிய விடுதலைப் போராட்ட நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், சுதந்திரப் போராட்ட கால்த்தில் அந்தச் சிந்தனையே இல்லாது சுப்ரமணிய துதி பாடிக் கொண்டிருந்த பாரதிதாசன் புரட்சிக் கவிஞராகக் கருதப்படுகிறார். இவரைவிடவும் காலத்தை முன்னுணர்ந்து புதிய புதிய சிந்தனைகள் தந்தவர்களை காலமும்மக்களும் மறந்து விடுகிறார்கள். இந்தப் போக்கு ஒரு மனிதனைத் துதிபாடும் மூடநம்பிக்க்ைகு இட்டுச்