பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வினாக்களும்

மாற்றுங்கள் என்று சொல்லி, சாந்தோம் பீச்சில் படமாக்கும்படிச் செய்தேன்.

'முதன் முதலாக அவுட்டோரில் படமாக்கப்பட்ட பாடல் அதுதான்’ என்றார் சுரதா,

சுரதா எழுதிய பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி யாகப் புகழ் பெற்றவை: நாடோடி மன்னன்’ படத்தில் வரும், கண்ணில் வந்து மின்னல் போல்’’ என்ற பாடலும், தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தில் இடம் பெற்ற, 'அமுதும் தேனும் எதற்கு,’’ என்ற பாடலும், :நீர்க்குமிழி’ படத்தில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா’’ என்ற பாடலும், மறக்க முடியுமா?’ படத்தில் வசந்த காலம் வருமோ?’ என்ற பாடலும், நேற்று இன்று நாளை’ யில் வரும், நெருங்கி நெருங்கிப் பழகும்போது போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம்.

சினிமாவுக்காகச் சுமார் அறுபது பாடல்கள் எழுதி 'யிருக்கும் சுரதா, சினிமாவில் அவர் இலக்கிய நயத்தை எப்படிப் புகுத்தினார் என்பதற்கு ஒர் உதாரணம் காட்டினார்:

நாடோடி மன்னன்' படத்திற்காக நான் எழுதிய :கண்ணில் வந்து மின்னல் போல்’ என்ற பாடலில், :மின்னல் கண்டு தாழை மலர்வது போல’ என்ற வரி களைப் படித்து எம். ஜி. ஆர். மின்னல் கண்டு தாழம்பூ மலர்வதா? அது எப்படி சாத்தியம்? என்று கேட்டார்.
நான் அதற்குக் குறுந்தொகையில் உள்ள பாடல் ஒன்றிலிருந்து ஆதாரம் காட்டினேன். எம். ஜி. ஆர். உட்பட எல்லோரும் அது கண்டு வியந்தார்கள். ஏனென்றால் அதற்கு முன் சங்க இலக்கியங்களிலிருந்து யோரும் மேற்கோள் எடுத்ததில்லை.' -