பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 107

திரைப்படப் பாடல்களின் முன்னும் பின்னும் என்ற தலைப்பில் சுரதா கவிதை நூல் ஒன்றினைத் தொகுத்து வருகிறார்,

1977-ல் தொடங்கிய பணியை முடித்திருக்கிறார்.

இந்த நூலில் எந்தெந்தப் பாடலாசிரியர், தாங்கள் எழுதிய பாடல்களில், பிற கவிஞர்களின் கிருத்துகளை எங்கே கையாண்டு இருக்கிறார்கள் என்பதையும் சுரதா ஆதாரத்துடன் தொகுத்திருக்கிறாராம். அதில் தன்னையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார்!

இப்போதுதான்

1958-ல் உதட்டோடு உதடு என்ற சுரதாவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நாவலாசிரியர் ஜெகசிற்பிய்ன், அவருக்கு உவமைக் கவிஞர்: என்று பட்டம் சூட்டினார். 1982-ல் சுரதாவின் மணிவிழா நடந்தது. +

சுரதாவின் ஒரே மகன் கல்லாடனும் ஒரு பத்திரிகை யாளர். அவரும் கவிதைகள் எழுதுகிறார். கவியரங்கங் களில் பாடுகிறார். -

சுரதாவின் இன்றைய பணி, ஆராய்ச்சி நூல் எழுதுவது, . கல்லூரி மேடைகளில் பேசுவது.

சினிமாவின் இன்றைய பாடல்கள் பற்றி சுரதாவின் கருத்து இது :

இன்றைய பாடல்களில் கருத்து அவசியமில்லை. திரைப்படப் பாடல்கள் சிற்றுண்டிபோல் இருக்க வேண்டும். முன்பு சமுதாயத்தைப் புரிய வைக்கப் பாடல்கள் தேவைப் பட்டன. பாடல்களில் கருத்துகளைத் திணிக்கக் கூடாது. வண்டியில் வைக்கோல் ஏற்றுவது போல் இப்போது பாடல் கள் எழுதப்படுகின்றன.?? - - -