பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் சுரதாவின் எண்ண அலைகளில் முன்னும் பின்னும்

கவிஞர் சுரதாவை பாண்டிபஜார் பஸ் நிலையத்தில் தற். செயலாகச் சந்தித்தேன். தான் ஒரு பயனுள்ள ஆராய்ச்சி நூலைக் கடந்த பத்து ஆண்டுகளாக எழுத முயற்சி செய்து கொண்டிருந்த விஷயத்தைச் சொன்னார். அதன் தலைப்பு: முன்னும் பின்னும். 1931 முதல் 1987 வரை சினிமாவுக்குப் பாட்டெழுதிய கவிஞர்களைப் பற்றி ஆராய்ந்து அவர் சேகரித்துள்ள பயனுள்ள விவரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போனார். பஸ் எங்களுடைய செவிசாய்ப்புக்கு நேரம் ஒதுக்கித் தந்தது. (நன்றி)

  • முதன் முதலாக 1931ல் வெளியான காளிதாஸ்” படத்திற்குப் பாட்டமுெதியவர்கள் இருவர். ஒருவர் டி.வி. நடராஜாச்சாரி, மற்றொருவர் பாஸ்கரதாஸ். முதல் சினிமாக் கவிஞர்களைப் பற்றிய செய்திகளைச் சேகரித் துள்ளேன்.?

எனக்கு வியப்பு ஏற்பட்டது. அத்தனைக் கவிஞர்கள் பாட்டெழுதியிருக்கிறார்களா?' என்றேன்.

'ஆமாம்! ஒரு பாட்டு எழுதியவரைக் கூட நான் விடவில்லை. 6 பெண்கள் கூட பாட்டெழுதியிருக்கிறார்கள்? என்றார். - *

போர். யார்? பெயர் சொல்லுங்கள்” கேட்டேன்.

முேதன்முதலாகச் சினிமாவுக்குப் பாட்டு எழுதிய பெண்மணி. டைரக்டர் கே. சுப்பிரமணியத்தின் துணைவி யாகிய மீனாட்சிசுப்பிரமணியம். இவருக்குப் பட்டம்மாள் என்கிற பெயரும் உண்டு. இவர் தன் கணவர்- டைரக்டர் கே. சுப்பிரமணியம் இயக்கித் தயாரித்த கீதகாந்தி: