பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i2 வினாக்களும்

ந்டித்த தயாளன்' படத்திற்குப் பாட்டெழுதி யுள்ளார். இவரை யாருக்கும் தெரியாது.

அந்த தயாளன்' கதையை எழுதியவர் எட்டயபுரம் மகாராஜாவின் தம்பியாவார். அவர் தன் சமஸ்தானக் கவியைப் பாட்டெழுதச் சொல்லியிருக்கிறார்.ஒரு இளவரசர் சினிமாவுக்குக் கதை எழுதியிருக்கும் விஷயமும் இந்த ஆராய்ச்சியின் மூலம் புரிந்தது.

படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டே அப் படத்திற்குப்பாட்டு எழுதியவர் ஒருவர் இருக்கிறார்.

(இவர் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே அந்த பஸ் வந்து விட்டது. ஒடிப் பறந்து இருவரும் பஸ் ஏறி இடத்தைத் தேடினோம். ஒரு இடம்தான் கிடைத்தது. கவிஞரை உட்கார வைத்துவிட்டு நான் கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றேன். பேச்சு தொடர்ந்தது).

'நான் என்ன சொன்னேன்... ம்... படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டு பாட்டு எழுதியவர் பெயர் பி. டி. வி. கிருஷ்ணன். படத்தின் பெயர் மகாத்மா கபீர்தாஸ். 1936ல் வெளிவந்த படம். -

இப்ப நம்ம டி. ராஜேந்தர் மாதிரியே அந்தக் காலத்தி ல்ேயும் அஷ்டாவதானியாக இன்னொரு கவிஞரும் இருந்திருக்கிறார். அவர் பெயர் அம்பாசமுத்திரம் ஏ. ரத்தினசபாபதி. இவர் ஒரு நாவல் ஆசிரியர், பேச்சாளர், கலப்புத் திருமணம் செய்து கொண்டவர். டேஞ்சர் சிக்னல்’ என்கிற படத்தில் கதை, வசனம், பாடல்கள் எழுதியிருப்பதுடன் அதில் அவரே நடித்தும் படத்தை இயக்கியும் உள்ளார். - -

'நடிகர்களுள்முதன் முதலாகப் பாட்டு எழுதியவர் யார் தெரியுமா? -