பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வினாக்களும்

வர்கள் லட்சுமணதாஸ், கே. வி. சந்தான கிருஷ்ண நாயுடு, உடுமலை நாராயண கவி, மதுரை பாலதாஸ், புதுகம்பன் பூமி பாலகதாஸ் ஆவார்கள்.

(போஸ்டல் காலனியெல்லாம் இறங்குங்கோ?? கண்டக்டர் குரல் கொடுத்தார் நான் இறங்க வேண்டிய? இடம் அதுதான். ஆனால் இறங்கவில்லை; என்னுடைய பயணச்சீட்டை விரிவுபடுத்திக் கொண்டேன், கே. கே. நகர் வரை.)

வித்வான்களாக இருந்து யார் யார் பாட்டு எழுதி யிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல ஆரம்பித்தார் சுரதா. பரமக்குடி சிவராமலிங்கம்பிள்ளை போன்ற சில பெயர் களைச் சொன்னார். வித்வான் வெ. லட்சுமணன் புலவர் என்றார்.

அந்தக் காலத்திலேயே பாட்டில் சீர்திருத்தக் கருத்துகளை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிற கவிஞர்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

'பக்தசேதா' படத்தில் பாபநாசம் ராஜகோபாலய்யர் இயற்றிய பாடலை உதாரணம் காட்டினார்.

'நட்ட கல்லைத் தெய்வமென்பார் கெட்டிக்காரர் பொய்யடா

சுட்டகல்லை பேச்சியெ னில்

சுவர்களின் பேர் என்னடா:

என வார்த்தைகளை அழுத்தமாகச் சொல்லியிருப் பதைச் சுட்டிக்காட்டினார்.

உடுமலை நாராயண கவி நல்ல தம்பி’ படத்தில் ரயில், தீண்டாமையை ஒழிக்க எப்படி உதவியது என்பதைச் சொல்லும் வகையில் ரயிலே... ரயிலே பாட்டு எழுதியிருப்பதையும் சொன்னார். -