பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூல் டிரிங்க்ஸ் குடிக்கிற நேரத்தில்...!

ராஜராஜன் விருதுக்கான நடுவர் குழுவில் ஒரு. உறுப்பினரான கவிஞர் சுரதாவைச் சந்தித்தோம். பரிசீலனையில் அவர் கலந்து கொள்ளவே இல்லை என்றாலும் சில விஷயங்களை மனம் திறந்து பேசினார்.

'இந்த விருது ெக டு க் க ற முறையே சரி யில்லேன்னேன்! ராஜராஜன் பேரில் விருது கொடுக்கும் போது எப்படிப்பட்ட இலக்கியங்களுக்குக் கொடுக்கணும்? சிற்பக் கலையின் மகுடமாயிருக்கிற தஞ்சாவூர்க் கோயிலைக் கட்டியவன் ராஜராஜன். அதனால் சிற்பக் கலை பற்றிய சிறந்த புத்தகத்துக்கு ஒரு லட்சம் கொடுக் கலாம். வெளிநாடுகளில் வெற்றிக் கொடி நாட்டியவன் ராஜராஜன். அவன் பெயரில், பயண நூல்களுக்கு விருது. கொடுக்கலாம். கோயில்களில் தேவரடியார்களை அறிமுகப் படுத்திப் பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தவன் அவன். அதனால், பெண்களைப் பற்றிய சிறந்த படைப்பிலக்கியத் துக்குப்பரிசுகொடுக்கலாம். அதை விட்டுவிட்டு விருதுக்குரிய இ ல க் கி யங் க ளு க் கு வரையறையில்லாமல் விதிகளை நிர்ணயித்திருப்பது தவறு.

கோவி. மணிசேகரன் விருது வாங்கிவிட்டு, முதல்வர் காலில் ஏன் விழ வேண்டும்? இது முதல்வரே பார்த்துத் தந்த ,பரிசு!’ என்று மற்றவர்கள் நினைத்துக் கொள்ள மாட்டார்களா? என்று சூடாகப் பேசினார். அவரிடம், :ஏன் நீங்கள் பரிசீலனை தினத்தன்று கலந்து கொள்ள வில்லை?’ என்று கேட்டோம். - -

எனக்கு வேற முக்கியமான வேலை இருந்திச்சு... போயிட்டேன்' என்றவர், போன வருடத்துத் தேர்ந்.