பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக் கவிஞர் சுரதாவோடு சில நிமிடங்கள்

அரசியல் என்பது எல்லோரும் பரவலாகப் பேசும், எழுதும், கேட்கும் கேள்விகள்.

அதையே ஏன் நாமும் அரைத்துக் கொண்டிருக்க வேண்டும். புதியதாக எதையாவது செய்வோமே? -

இப்படி, நான் சந்தித்ததும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசினார் உவமைக் கவிஞர் சுரதா,

அதனால்,

'சினிமாவைப் பற்றி ஏதாவது கேளுங்கள். அதை வாசகர்கள் படித்து மகிழ்வார்கள்?’ என்றார்.

நல்ல நகைச்சுவை உணர்வோடு, எந்தத் தங்கு தடங்கலும் இன்றி அவர் சொன்ன சில செய்திகளைக் கீழே தருகிறேன்:- -

முன்தையப் பாடல்களைப் போல் இன்றைய பாடல்கள் மனதில் நிற்பதில்லை என்று சொல்வதெல்லாம் பொய். முன்னகாலம் மாதிரியா இப்பத் துணி கட்டுறோம். இப்ப வெல்லாம் மேடு பள்ளம் நல்லாவே தெரியும்படிதானே துணி கட்டுறோம். அந்த மாதிரிதான் இதுவும். காலத்துக் கேற்ப கட்டுந் துணியைக் குறைச்சிட்டோம். அதேபோல், இசைக் கருவிகளை அதிகரித்துப் பாடல் வரிகளைக் குறைத்து விட்டார்கள்.

எப்படி ஒரு இதழை எடுத்ததும் முதலில் அதில் அடங்கியிருக்கும் துணுக்குகளைப் படித்துவிட்டு, நேரமும் காலமும் இருக்கும்போதுதான் பெரிய கதைகளையோ, செய்திகளையோ, படிக்கிறோம்’ல அப்படித்தான் இதுவும்.