பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 வினாக்களும்

அதுபற்றிய ஒரு திறனாய்வு வெளிவர வேண்டும் என்பதை யும் அதில் வலியுறுத்தியிருந்தேன். அது 1958.

அப்புறம் இப்ப நேத்து நடந்து முடிஞ்ச ஒரு கூட்டத்துல, ஆரம்பிக்கும்போது கடவுள் வாழ்த்து அது இதுன்னு பாடாம,சங்க இலக்கியத்துவ இருந்து ஒரு ரெண்டு வரியப்பாடுங்கன்னு சொன்னேன். இப்படிச் செய்யும்போது மறைஞ்சு போகாம இருக்கும். புதிய தலைமுறையினருக்கு சங்க இலக்கியம்னு சொன்னா அத நம்ம சரியா-இதுதான் சங்க இலக்கியம்னு சொல்லித் தரணுமில்ல.

நம்ம ஆளுங்க திரும்பத் திரும்ப பேசினதையே பேசி காலத்தெ விரையமாக்குகிறோம்-இது யாருக்கு லாபம்?

எழுத்துச் சீர்திருத்தம் தேவையா இல்லையான்னு சிந்திக்கறதுக்கு முன்னாடி, அதெ யாரு அறிமுகப் படுத்தினார்ங்கிறது மறந்து போச்சு. பெரியார் கொண்டு வந்தாருன்னு சொல்றதெல்லாம் தப்பு. பா. வே. மாணிக்க நாயக்கர்னு ஒருத்தர் இருந்தார். அவர் எஞ்சினியர், அவரை வெச்சுத்தான் இந்த சுயமரியாதை இயக்கத்தையும் தொடங்கினார். அவர் இந்த எஃப்’னு எழுதறதுக்கு ஆயுத எழுத்து போடுறோம் இல்ல. அதெல்லாம் அறிமுகப்படுத்தி இருப்பதைக்காட்டி, 'கை'யனான்னா கொம்பு வெச்சு:கனா போடுறோம், அதைப்போலணையனானா கொம்பு வெச்சி'ண'னா போடணும்னு சொன்னார். ஆனா, அதை வார்ப்பு செய்றதுல தவறு ஏற்பட்டுப் போச்சு.

இப்ப, எளிதா நடமாடுறதுக்கு வேட்டியை மாத்தி கால் சட்டை போட்டுக்றோம்ல. அதுபோல காலம் மாறிக் கிட்டிருக்கு. நாம மாறறோம். எழுத்தையும் சுருக்கிக் கையாள வழி இருந்தா கையாள்வதி’ல தவறல்ல அதெல்லாம் சரிதான். -

சுரதாவைச் சந்தித்தவர் : பழ. எ. அன்பழகன்

இதழ் : தினமணி (கோலாலம்பூர், மலேசியா)

- 6-12-五98贸