பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 வினாக்களும்

பெரிய பெரிய காவியங்களில் படைக்கப்படுகின்ற கருத்துகள் மட்டுமே சிறந்தவை என்கிற மனோபாவத் திற்கு எதிராகத் திரைப்பாடல் எவ்வளவு சக்தி வாய்ந்தது. என்பதைத் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ஆய்வை மேற் கொண்டு வருகிறேன்.

திரைப்படப் பாடலாசிரியர்கள் சாமானியர்கள் அல்ல: அவர்களது கருத்துகளும் சாதாரணமானது அல்ல.

தமிழ் உலகம் போற்றிப் புகழ்கின்ற பல கவிஞர்களை விட இந்தத் திரைப்பாடல் ஆசிரியர்கள் மேலானவர்கள்; சிறந்தவர்கள் என்பது என் கருத்து. -

பாரதியார்-பாரதிதாசனைவிடத் திரைப் பாடல்கள் மூலம் கோடான கோடி மக்களைப் போய்ச் சேருகின்ற கவிஞர்களாக இந்தத் திரைப்படப் பாடலாசிரியர்கள் விளங்குகிறார்கள். - -

போகிற போக்கில் மிகச் சாதாரணமாகப் பாட்டெழுதி பல அரிய கருத்துகளை அவர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். - - -

அந்தக் கருத்துகள் - காவியங்கள் தீட்டுகின்ற கவிஞனால் கூட சிந்திக்க முடியாதவையாக-அனுபவம் பொதிந்து கிடக்கும் கருத்துகளாக விளங்குகின்றன.

திரைப்படப் பாடலுக்கு இலக்கியத் தகுதி

குறிப்பாக நாமெல்லாம் திரைப்பாடல்களைக் கேட்ட தோடு சரி, மாறாக அந்தப் திரைப்பாடல்களுக்கிடையே ஆங்காங்கே மின்னலாய்த் தெறித்துப் போகும் கருத்து களை நாம் உணர்ந்து பார்ப்பதில்லை. -

திரைப்பாடலுக்குத் தாராளமாக இலக்கியத் தகுதியைத் தரலாம.

இந்த அடிப்படையில் தான் கடந்த 10 ஆண்டுகாலமாக திரைப்படப் பாடல்கள் குறித்து ஆராய்ந்து வருகிறேன்.