பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 13套。

எத்தகைய கருத்துகளை திரைப்படப் பாடல்கள் மூலம் மக்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள்.

அரசியல் சமுதாயச் சிந்தனைகளை அவர்கள் எப்படி யெல்லாம் திரைப்படப் பாடல்களில் புகுத்தி இருக் கிறார்கள்; எவ்வாறு கையாண்டுள்ளார்கள். தத்தெடுத்த கவிஞர்கள்

அதோடு, எங்கெங்கிருந்து கருத்துகளை தத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற அம்சங்களை நூலில் ஆராய்ந்திருக்கின்றேன்.

1931-ம் ஆண்டு திரை உலகில் பேசும் படம் அறிமுக மானதற்குப் பின்னர் 416 பேர் திரைப்பாடல்களை எழுதியுள்ளனர். ,இவர்களில் 144 பேர் தமிழ் நாட்டவர்கள், இருவர் மலேசியர்கள். இந்தப் பட்டியலில் 7 பெண்களும் இடம் பெற்றுள்ளனர்.

திரைப்பாடல் ஆசிரியர்களின் பட்டியல் இன்னும் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.

கடல் கடந்து தமிழ்த் திரைக்குப் பாட்டெழுதியவர்கள் என்று சொன்னால் கவிஞர் காரைக் கிழாரையும் கவிஞர் கரு. வேலுச்சாமியையும் குறிப்பிடலாம்.

அதுமட்டுமல்ல திரைப்பாடல் எழுதியவர்களில் பெரிய பெரிய வித்வான்கள் கூட அடங்குவர்.

தருமபுர ஆதீனத்தில் தலைமைப் புலவராக விளங்கிய மாயவரம் தியாகராஜ தேசிகர் எட்டயபுரத்தின் முதல் ஆஸ்தான கவிஞருமான மகாராஜா வாத்தியார் முதலான பெரும் புலவர்கள் எல்லாம் திரைப்பாடல் எழுதியிருக், கிறார்கள். ~::. இன்றைக்கும் பொருந்துபவை

இன்றைக்கும் பொருந்தக் கூடிய பல முற்ப்ே கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள் அவர்கள்,