பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் - 183義.

தத்தாரி அரசாளும் தன்ரிக்காட்டு ராச்சியத்தில் கத்தரிக்கோல் மந்திரியாம் கன் னக் கோல் காவலராம்!

கஞ்சிக் கலயத்திலே கட்டெறும்பு மேயுதடா! பஞ்சத்துக்குப் பஞ்சமில்லை பாவிப்பயல் ராச்சியத்தில்!

வீதியெல்லாம் தூக்குமரம் வீடெல்லாம் சிறைவாசம் வாதனையும் சோதனையும் மடி மாங்காய் தேடுதடா!

பக்கமெல்லாம் குள்ளநரி பதுங்கித் திரியுதடா! எக்காளம் போடு தடா எங்க நாட்டு சீமையிலே!

மேற்கண்ட பாட்டு 1948ல் எழுதப்பட்ட பாட்டு என்றாலும் அதன் கருத்து இன்றைக்கும் பொருந்தும்; இனி என்றைக்கும் பொருந்தும். இதுபோன்ற கருத்துச் செறிவு காவியங்களில் மட்டும்தான் கிடைக்கும் என்பதல்ல, திரைப்பாடல்களில் ஏராளமாக மண்டிக்கிடக்கிறது.

சுரதாவைச் சந்தித்தவர் : அக்கினி இதழ் : தமிழ் ஓசை (மலேசியா) 6.12-1987