பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமுறை சந்திப்பு

நிர்மலா

சுரதா :

கேள்வி :

கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு கவிதை களில் அதிகமா ஈடுபாடு உண்டு. உங்க சுரதா" பத்திரிகையை விரும்பிப் படிப்பேன். உங்களை மாதிரி மொழிப் பற்று உள்ளவங்க ரொம்ப குறைஞ்சுட்டாங்க என்பது என் அபிப்பிராயம்.

எனக்கு மொழிப்பற்றுக் கிடையாது. (நிர்மலா சுரேஷ் திகைப்பதைப் பார்த்து விட்டு) ஏன் சொல்றேன்னா பற்று என்றாலே இதைவிட ஒண்ணு உசத்தியா கிடைச்சுடுத்துன்னா அது பேரில தாவிடும். மொழிப் பொறுப்பு, மொழி மூச்சு எனக்கு உண்டுன்னு சொல்ல வர்றேன். (இருவரும் சிரிக்கிறார்கள்) சமீபத்தில் ஒருத்தர் சொன்னார்.பெயர் சொல்ல விரும்பல விரைவில் கவிதை அழிந்து விடும்; உரை நடை ஆதிக்கம் தான் நிலைக்கும் என்று. உங்க கருத்தும் அதுதானா? நிச்சயமா கிடையாது. சுருக்கமா சொல்லறதைத் தான் இப்ப ஜனங்க ரசிக்கிறாங்க. ஒடற ஒட்டத்தில் எதையாவது படிச்சா, எதையாவது கேட்டா போதும்னு நினைக்கிற காலமாயிடுச்சு, சுருக்கமா சொல்லணும்னா கவிதை தான் சரிப்பட்டு வரும். உரை நடை சரிப்படாது. இல்லையா? (அப்போது ஆப்பிளை நறுக்கி ஒரு தட்டு முழுவதும் எடுத்து வந்து வைக்கிறார் அவர் மருமகள். அதைப் பார்த்து விட்டு சுரதா தொடர் கிறார்) இதையே எடுத்துக்குங்க. முன்பெல்லாம் முழுசா ஆப்பிளையோ ஒரு பழத்தையோ