பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண்ணை மதிக்கும் கவிஞர்

கவிஞர்கள் வீட்டு வரவேற்பு அறையிலுள்ள அலமாரிகள் புத்தகங்களால் நிரம்பியிருக்கும். ஆனால் கவிஞர் சுரதா வீட்டு வரவேற்பறை அலமாரியில் பிளாஸ்டிக் டப்பாக்கள் நிரம்பி இருக்கின்றன. நாட்டு வைத்தியர் வீட்டைப் போல், லேகிய வியாபாரி வீட்டைப் போலக் காட்சியளிக்கிறது.

டப்பாக்களில் என்ன இருக்கிறது?

சுரதா: 1982-ஆம் வருடம் பொங்கல் விழாவிற்காக

மலேசியா சென்றிருந்தேன். கோலாலம்பூரிலிருந்து கடா

மாநிலத்துக்கு காரில் போய்க் கொண்டிருந்தேன். வழியில் கார் நின்றது.

'இந்த இடத்தில்தான் ராஜராஜேந்திர சோழன் கேம்ப் போட்டுத் தங்கியிருந்தான். பின்புதான் படையெடுக்கச் சென்றான், என்று சொன்னார்கள். 1100 ஆண்டுகளுக்கு முன் சென்று அந்த இடத்தில் ஒரு தமிழ் மன்னன் தங்கிய இடத்தைப் பார்த்ததும் நமக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும்! அது எனக்கு அப்போது ஏற்பட்டது. உடனே காரிலிருந்து இறங்கிப்போய் அந்த இடத்தில் ஒரு கிலோ அளவுக்கு மண்ணை அள்ளிக் கொண்டு காரில் ஏறிப் பயணததைத் தொடங்கினேன்.

நான் பள்ளியில் விருப்பப் பாடமாக வரலாறு எடுத்துப் படித்தவன். வரலாற்றில் கொஞ்சம் ஆர்வம் உண்டு.