பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசு கொடுத்தால் நீ கூட கவியரசுதான்!

'கண்ணில் வந்து மின்னல் போல் தோணுதே இன்ப காவிய கலையே ஒவியமே! 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா! 'அமுதும் தேனும் எதற்கு-நீ அருகினிலே இருக்கையில் எனக்கு...' 'நெருங்கி, நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்.' என்பன போன்ற பல திரைப்படப் பாடல்களைப் பாடிய உவமைக் கவிஞர் சுரதா அவர்களை இளமையான ஒரு பகல் பொழுதில் சந்தித்த போது - கேள்வி : இன்றைய திரைப்படப் பாடல்களின் தரம்

எப்படியிருக்கிறது?

பதில் : தரத்தைச் சொல்லக் கூடிய அளவில் இன்றைய பாடல்கள் இல்லை. அன்றைய பாடல்கள் பொன்னால் செய்யப்பட்ட நகையைப் போன்றது. இன்றைய பாடல்கள் கவரிங் நகையைப் போல...

கேள்வி : கண்ணதாசன் பல பாடல்களை காப்பி அடித்து எழுதி இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர் கள். வைரமுத்து, காமராசன் போன்றவர்கள் எப்படி?