பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 வினாக்களும்

வகைகளையும் கூட முன் கூட்டியே நிர்ணயித்துக் கொண்டு விட்டதால், தெளிவாகச் சிந்தித்துப் பெரும் வெற்றி காண முடிந்தது.

சலன புத்தி மன அமைதியைக் கெடுத்து விடுகிறது. ஒப்பிட்டுப் பார்க்கும் குணமுள்ளவர்கள் மன அமைதியை இழக்கிறார்கள். நமக்குக் கிடைத்ததை வைத்துத் திருப்தி யடையாமல், மற்றவனுக்குக் கிடைத்ததை நினைத்து மனப்புழுக்கம் அடைபவன் சந்தோஷத்தை இழக்கிறான். நல்ல கருத்துகளைத் தேர்ந்தெடுத்து இதுவாழ்க்கைக்குப் போதும்...' நல்ல பொருட்களைத் தேர்ந்தெடுத்து இது வீட்டுக்குப் போதும்...? நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து இவர்கள் நம் சிந்தனைக்குப் போதும்...” என்று முன் கூட்டியே தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டால் குழப்பம் நீங்கி மன மகிழ்ச்சி நிச்சயம் கிடைக்கும்.’’

சுரதாவைச் சந்தித்தவர் : எஸ். ராமன் இதழ் : ஆனந்தவிகடன், 13-5-1990