பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறந்த நாள்! சிறந்த நாள்! வழக்கமாக அறிமுக அட்டையில் (விசிட்டிங்கார்டு) அவரவர் பெயர்களை மட்டுமே அச்சிடுவார்கள். ஆனால், உவமைக் கவிஞர் சுரதா அவரது அட்டையில் தனது பிறந்த நாளை (23-11-1921) அச்சிட்டுள்ளார்! அதோடு சிறந்த நாள்' (14-1-1941) என்றும் ஒன்றைக் குறிப் பிட்டிருக்கிறார்!

தொலைபேசி : 4285.08.

உவமைக் கவிஞர் சுரதா

தலைவர் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை

56 அ, இலட்சுமணசாமி சாலை

பிறந்த நாள் - கலைஞர் கருணாநிதி நகர் 23-i ? - ? § 3 ; சென்னை-600 018 சிறந்த நாள்

能4-1-194氮 பாவேந்தரை நான் சந்தித்த நாள்

  • அது என்ன சிறந்த நாள்’’’ என்று கேட்டதற்கு, 'என் வாழ்க்கையிலேயே சிறந்த நாள் அதுதான். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை அன்றுதான் (14-1-1941) நான் சந்தித்தேன்’ என்று சுரதா சொன்னார்.

5 வயது ஆகும் தன்னுடைய பேரன் இளங்கோவனுக்கும் இதேபோல் அட்டை அச்சிட்டுக்கொடுத்திருக்கிறார், சுரதா, அதிலும் பிறந்த நாள் (6-9-1984), சிறந்த நாள் (8.1-1989) என்று குறிப் பிட்டுள்ளார். இளங்கோவன் தொலைக்காட்சியில் தோன்றிய நாள்-8-1-1989.

சுரதாவைச் சந்தித்தவர் : ராணி நிருபர் இதழ் : ராணி, 16.12-1990