பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 13.

பின்னர், புரட்சி நடிகர் எம். ஜி. ராமச்சந்திரனும், திருமதி பி. எஸ். சரோஜாவும் நடித்த ஜெனோவா? என்னும் படத்திற்குப் பாடல்கள் எழுதினேன். எழுதப் பெற்ற ஒரு பாடலின் ஏழாவது வரியில்,

'பெருந் தீ மீதிலே

ஈ மொய்ப்பதுண்டோ? என்ற பழைய கருத்தை நினைவுபடுத்திவிட்டு, இதற்கு அடுத்த வரியாக,

'நீல வான் மீதிலே

நிழல் படுவதுண் டோ?

என்று எழுதியிருந்தேன், நீல வான் மீதிலே நிழல் படுவதுண்டோ?’ என்னும் கருத்தைப் பெரிதும் பாராட்டிய தோடு, அதற்கு அன்பளிப்பாக ஐந்நூறு ரூபாயும் தந்தார், அந்தப் படத்தின் அதிபர்களுள் ஒருவரான திரு. ஈப்பன் என பவர.

பற்களைப் போன்று, மிகவும் எண்ணிக்கைக் குறைவாகவேதான் நான் பாடல்கள் இயற்றியுள்ளேன். தற்போது வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் படத்தில் பாடப்பட்டு வரும் அமுதும் தேனும் எதற்கு?’ என்ற பாடல், நான் இயற்றியதுதான். அந்தப் பாடலுக்கு, திரு. கே. வி. மகாதேவன் இசையமைக்க, இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மிகவும் இனிமையாகப் பாடியுள்ளார்.

பாடலைப் பாராட்டுகின்றனர். என்றாலும், என்னைப் பொறுத்தமட்டில் இதற்கு முன் நான் எழுதியிருக்கும் பாடல்கள் பட்டுப் பாவாடை போன்றவை; இந்தப் பாடலோ அதற்கு ஒரு நாடா போன்றதுதான்!

நெற்றிச் சுருக்கமும், நரையும், நிறைந்தநிகழ்ச்சிகளும் உடையவர்கள், வாழ்க்கை வரலாறு எமுதினால்,