பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவி ன் விடைகளும் 21.

இதைக் கேட்டதும் கவிஞரின் முகம் சிவந்தது. நெருப்புத் துண்டுகளாக கண்கள் மின்னின. ஒரு கவிஞ. னுக்கே உரிய செம்மாந்த நடையில், 'யாரது? எவன் சொன்னான்? உயிரோடு உதாரண மா நான் இருக்கிற: போது எவன் என்ன சொல்ல முடியும். அவன் கிடக்கிறான் ......?? என்றார்.

கவிஞரின் சினத்தை-தார்மீகமான கோபத்தை. திசை திருப்பிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கவிதை பற்றிய உங்கள் கோட்பாடு என்ன?’ என்று கேட்டேன் நான்.

'கவிதை எழுதக் கற்பனையும் தேவையில்லை; கடவு வரின் அருளும் தேவையில்லை; இதுதான் என் முடிவு, என்னைப் பொறுத்தவரை கவிதை என்பது ஒரு சயன்ஸ்’ நன்றாகப் படித்தால் எழுதலாம். அரசாங்கம் மட்டும் என்னை ஆதரிக்குமானால் நான் நோபல் பரிசே’ வாங்கிக் காட்டுவேன். இதுவரை வாங்கியிருக்கிறவனை யெல்லாம் கீழே போட்டு மிதிச்சிட்டு மேலே வந்துடுவேன். காரணம் எனக்கு கற்பனை கிடையாது, அதனாலேதான்.”

உங்கள் கவிதைகளில் காம உணர்ச்சி அதிகமாக இருக்கிறதென்று சிலர் குறை சொல்கிறார்களே?

சரி, குறையின்னெ வங்சிக்குங்க. இது குறைன்னு சொன்னா, அந்தக் குற்றம் என் ஒருவனுக்கு மட்டும் தானே? தேவாரம் என்ன? திருவாசகம என்ன? அதிலே இல்லையா? ஈர்க்கிடை போகா ஏரிள வன முலை' என்று பாடினானே, மாணிக்கவாசகன் ...... அவன் என்ன?....... எடுத்துக் கொண்ட விஷயததைச் சரியாப் பாடணும்.அது. தானே வேண்டியது? ---

'சரிங்க...இப்ப சில பேரு புதுக் கவிதை' எனற.

பேரிலே இலக்கணமே இல்லாமல் பாடுகிறார்களே,-அது சரியா??