பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 வினாக்களும்

"இதிலேயெல்லாம் அர்த்தமில்லை. கண்ணுக்குப் புரு வம் தேவை. கவிதைக்கு இலக்கணம் தேவை. இதெல்லாம் ஈசல் சிறகு மாதிரி; உதிர்ந்து போய்விடும்.’’ -

இன்றைய இளங்கவிஞர்கட்கு தாங்கள் கூறும் யோசனை என்ன???

சில பேர் நன்றாகத்தான் பாடுகிறார்கள். புலவர் பொன்னி வளவன், வல்லம் வேங்கடபதி, எழில் முதல்வன், மின்னூர் சீனிவாசன், முருகு சுந்தரம், புலவர் உசேன் போன்றவர்கள் பாதிப் பாரதிதாசர்கள். இன்னும் நன்ருகப் படித்து, மரபை அறிந்து, புதுமையைப் படைக்க வேண்டும். இருப்பதை மட்டும் சொல்லாமல் இன்னும் பலவற்றைக் :கிரியேட்' பண்ணணும். கிரியேஷன் இல்லேன்னா எல் லாம் அடி பட்டுடும், விழுந்துடும். அவ்வளவுதான்.”

இதற்குள் அமிழ்தன் குறுக்கிட்டு, நீங்கள் ஏன் சுரதா என்று பெயர் வைத்துக் கொண்டீர்கள்?’ என்று கேட்டார்.

பாரதிதாசனிடத்திலே எனக்கு ஈடுபாடுஉண்டு. அத னாலே சுப்புரத்ன தாசன்னு வச்சிக்கிட்டேன். ஒரு சமயம் லெட்டர் எழுதறப்போ கையெழுத்துப் போட எடமில்லே. சு.ர.தா. என்று சுருக்கமாக இடையிலே புள்ளிவைத்து எழுதினேன். பிறகு யோசித்துவிட்டு, இடையிலே இந்த ஆணி எதுக்காகன்னுட்டுப் புடுங்கிட்டேன். இதுதான் சுரதாங்கிற பெயர் வரலாறு' என்றார்.

சரி .....உங்களை உவமைக்கவி என்று முதன் முதலில் அழைத்தது யார்?

எழுத்தாளர் ஜெகசிற்பியன் இல்லே...அவருதான் 45.46 -லே சிரஞ்சீவின்னு பத்திரிகை ஒண்ணு நடத்தினார். அவருதான் உவமைக்கவிஞர்' என்று தன் பத்திரிக்கை யிலே போட்டார். அப்புறம் எல்லாரும் சொன்னாங்க... ஜெகசிற்பியன் பெரிய ஆளு. சிந்தனை செய்வதில்மன்னன். நல்ல மனிதன்...' -