பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

பதில் :

கேள்வி :

வினாக்களும்:

என்னை முதன்முதலில் கவிஞராக அறிமுகப் படுத்தியவர் கவிஞர் திருலோக சீதாராம். தாம் நடத்தி வந்த சிவாஜி'யில் என் கவிதை களைத் தொடர்ந்து பத்து வாரம் வெளியிட்டு என்னை விளம்பரப் படுத்தினார். புதுக்கோட்டை யில் இருந்து வெளிவந்த தலைவன்’ பத்திரிகையில் கொஞ்ச ந | ள் துணையாசிரியராகப் பணி யாற்றினேன்.

பாவேந்தருக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பு பற்ற? பாவேந்தர் ஆற்றல் பரந்து பட்டது. அவருடைய தொடர்பு என்னைக் கவிஞனாக உயர்த்தியது. பாவேந்தரோடு நான் காண்டுகள் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பாவேந்தருடைய கவிதை நூல்களைப் படியெடு க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த காரணத்தால், அவருடைய உத்திகளைப் புரிந்து கொண்டேன். எனது கவிதைத் துறைக்குப் பாவேந்தர் வழிகாட்டி. ஆனால் நான் அவரைப் பின் பற்றி எழுதவில்லை. ஒரு பெருங்கவிஞரைப் பின் பற்றி எழுதினால், நம்முடைய சொந்த வளர்ச்சி பத்தாண்டுகள் பின் தங்கி விடும்.

யாரையும் பின்பற்றாமல் புதிய முறையில் எழுத,

வேண்டும் என்று நீங்கள் நினைக்கக் காரணம் என்ன?

நான் ஒரு நாத்திகன். கவிதை ஒரு வரப்பிரசாதம் என்பதை நான் மறுக்கிறேன். கடுமையாக உழைத்துப் பழைய புலவர்களை வென்று காட்ட வேண்டும் என்ற ஆர்வம் என்னை இளமையில். உந்தித் தள்ளியது. எனக்கு இத்தகைய நம்பிக்கையும், மன உறுதியும் ஏற்பட்டதற்குக்