பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதை பிறந்தகதை

ஒரு சிறு நிகழ்ச்சி கவிஞர் சுரதாவுக்குக் கவிதை பிறக்கவழி வகுத்தது. அது என்ன?

புய நானூறு ,

பாரதியாரின் மகள் சகுந்தலாவுக்கு வயது ஐந்து இருக்கும். ஒரு சமயம் அவள் தன் அன்னை சொல்லை மதிக்காதிருந்ததைப் பாரதியார் பார்த்தார். உடனே அவருக்குக் கவிதை பிறந்தது சோம்பல் மிகக் கெடுதி பாப்பா - தாய் சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!' என்று தம் மகளுக்கு அறிவுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து பாப்பாவுக்குப் பாட்டு என்ற தலைப்பில் கவிதை பிறந்தது.

இதுபோல, இக்காலக் கவிஞர் சுரதா அவர்களின் இல்லத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவமும் கவிதை பிறக்கக் காரணமாய் இருந்தது. -

சுரதா ஏராளமான நூல்களை அரும்பாடுபட்டுச் சேர்த்து வைத்திருக்கிறார். அவற்றைத் தம் வீட்டில் வைக்க இடமில்லாமல், ஒர் அறையின் நான்கு பக்கமும் தரை யிலிருந்தே ஆள் உயரத்துக்கு அடுக்கி வைத்திருக்கிறார்.

இவ்வளவு புத்தகங்களுக்கிடையே, எந்தெந்தப் புத்தகம்

எங்கெங்க இருக்கிறது என்பதை இவரால் தான் அறிந்து கொள்ள முடியும். சில சமயங்களில் தம்முடைய ஒரே மகன் கல்லாடனை அழைத்து அதோ, அந்தக் கனத்த, புத்தகத்தை எடு... இதோ இந்தப் பச்சை அட்டைப் புத்தகத்தை எடு' என்று சொல்வார். மகனும் அவ்வாறே. கொடுப்பான். -