பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரிக்கு ஐந்நூறு வாங்கினேன்

'எனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் குறைவுதான். ஆனால், அதிலே எனக்குக் கிடைத்த வெற்றியோ கணிச. மானதுதான். நான் யாரையும் தேடிப் போய்ப் பாட்டு எழுத சான்ஸ் கேட்டதில்லை. நான் அப்படி தேடிப் போயிருந்தா, இந்நேரம் மற்றவர்களையெல்லாம் சந்தேகத்துக்கிட மில்லாமல், இரண்டாந்தரமாக்கி யிருப்பேன்...” என்று ஒரு கட்டுக் கவிதைக் குவியல்களிலிருந்து நிமிர்ந்து, பேசுகிறார் கவிஞர் சுரதா,

"அமுதும் தேனும் எதற்கு,நீ அருகினில் இருக்கையிலே எனக்கு...' என்று ஒர் இதமான பாடலை இயற்றி, இளம் காதல் நெஞ்சங்களைக் கிளுகிளுக்க வைத்தவர், இந்த கப்புரத்தின தாசன் என்கிற சுரதா தான்!

சுமார் 30 படங்களுக்குப் பாடல்களும், மங்கையர்க்கரசி, அமரகவி, ஜெனோவா, புதுவாழ்வு போன்ற படங்களுக்குக் கதை-வசனமும் எழுதிப் புகழ் பெற்றார் தான் அதிகமான படங்களில் பணியாற்றாவிட்டாலும், அதனால் தன் மரியாதையும், செல்வாக்கும் இன்றளவும் குறையவில்லை என்று வாதிடுகிறார் சுரதா.

1945-ல் பட உலகில் நுழைந்த இவர், முதன் முதலில் கதை வசனம் எழுதியது. பி. யு. சின்னப்பா நடித்த 'மங்கையர்க்கரசி'க்கு. முதல் செட்டில் இவருடைய தர்பார் சீன் வசனத்தைப் படித துப் பார்த்த சின்னப்பா,