பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வினாக்களும்

வட்டத்தில் இருந்த 12 மிராசுதார்கள் ஒன்று சேர்ந்து, எந்த வகையிலாவது பிள்ளையவர்களுக்கு மரியாதை, செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதே மாதிரியே பிள்ளையவர்கள் உயிரோடு இருக்கும் வரை ஆளுக்கு ஒரு வண்டி நெல் மாதந்தோறும் அவர் வீட்டுக்கு அனுப்புவது என்று தீர்மானித்து, அதே மாதிரியே பங்கு போட்டுக் கொண்டு மரியாதை செய்தனராம். அதே போல எங்கள் அறிவை மதித் துப் பசியை ஆற்றியிருக்கும் கருணாநிதி அவர்களின் செயலோடு இதை ஒப்பிடுவதில் பெருமைப் படுகிறேன்' என்று கூறுகிறார் சுரதா. -

சுரதாவைச் சந்தித்தவர் : சுந்தரம். இதழ் : ஆனந்த விகடன், 23-7-9171

என்ன வித்தியாசம்?

சினிமா அனுபவங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, கவிஞர் சுரதாவிடம், எம். கே. தியாகராஜ பாகவதருக்கும், பி. யூ. சின்னப்பாவுக்கும் என்ன வித்தியாசம்? என்று ஒருவர் கேட்டார். கவிஞரின் பதில் : 4:எம் கே. தியாகராஜ பாகவதர் ஒரு ரூபா வைத்திருந்தால், ஒரு ஆப்பிள் பழம் வாங்கிச்சாப்பிடுவார். பி.யு.சின்னப்பா, ஒரு ரூபாய்க்கும் பூவன் பழங்களாக வாங்கிச் சாப்பிடுவார். இருவருக்கும் உள்ள வித்தியாசம் எல்லா அம்சங்களிலும் இதுதான்!” t -

சுரதாவைச் சந்தித்தவர் : புலவர் உசேன் இதழ் நான்கு பக்கம், ஜனவரி,-1978