பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோயினால் நான் சாக மாட்டேன்

என்னிடம் எந்த விதமான கெட்ட பழக்கமும் கிடையாது, பொடி போடுவதைத் தவிர. நோயினால் நான் சாக மாட்டேன். எனக்கு ஒரு பேராசை உண்டு. சாவு வந்தால் ஓடும் தண்ணிரில் சாக வேண்டும் என்பது. என் சவத்துக்குப் பின்னால் எத்தனை பெரிய கூட்டம் வந்தது என்று கணக்கிட முடியாமல் போகும். இரண்டாவது, போகிற காலத்தில் என்னைத் தூக்கிச் சுமக்கும் அந்த நாளு பேருக்கு நன்றி கூறவேண்டிய அவசியமும் இருக்காது.

சுரதாவைச் சந்தித்தவர் : பாவை இதழ்: குங்குமம், 19-3-1978

D

அண்ணாவிடமிருந்த தமிழ்ப்பற்றை புரட்சித் தலைவரிடத்தில் காண்கிறேன்

பாவேந்தர் நினைவுவிருது பெற்ற உவமைக் கவிஞர் சுரதா சிறப்புப் பேட்டி

பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில், தலைமைக் கவிஞராக வாழ்பவர் கவிஞர் சுரதா. இவரது இயற்பெயர் இராசகோபால். இவர் பாவேந்தர் மேல் கொண்ட ஈடுபாட்டால் சுப்புரத்தினதாசன் என்று தன்னை அழைத்துக் கொண்டு சுரதா ஆனார். -

தமிழக அரசு பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வழங்கி கவிஞர்களை ஊக்குவிக்க தீர்மானித்ததன் பேரில்,