பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் - 49

. கேள்வி :

பதில் :

இருந்து, சிறு சிறு கவிதைகள் எழுதி வந்த நான், பாவேந்தரைப் பார்த்த பிறகு, அவரது பாணியை மட்டும் பின் பற்றிக் கொண்டு, அவரை நான் வழிகாட்டி ஆக ஆக்கிக் கொண்டேன்.

ஏன் சுரதா என்று வைத்துக் கொண்டீர்கள்? பாவேந்தர், தன் பெயரை விட்டு விட்டு,பாரதிக்குத் தாசனாகி பாரதிதாசன்’ ஆனார். அவர் விட்ட அந்தப் பெயரை (சுப்புரத்தினம்) எண்ணிப் பார்த்து, அ வ ர து பெயருக்குத் தாசனாக, சுப்புரத்தினதாசன் என்று என்னை அழைத்துக் கொண்டேன். ஒருமுறை மாட்டுக் கொட்டிலில் இருந்து கடிதம் எழுதும்போது கையெழுத்துப் போட்டேன். கடிதத்தில் இடம் குறைச்சல் எனவே சு. ர. தா. என்று புள்ளியிட்டு சுருக்கி, எழுதிப் பின்னாளில் சுரதா என்றே ஆக்கிக் கொண்டேன். -

நீங்கள் சென்னைக்கு முதன் முதலாக வரக் காரணம் என்ன? 'முத்தமிழ் நிலையம்' என்ற அமைப்பை பாவேந்தர் நண்பர்கள் ஏற்படுத்தி புரட்சிக்கவி, நாடகத்தை அரங்கேற்ற இருந்தபோது, அந்த நாடகத்தில் நடிப்பதற்காக பாவேந்தர் என்னைக் கடிதம் மூலம் அழைத்தார். அந்த நாடகத்தில் அமைச்சர் பாத்திரம் ஏற்று நடித்தேன். அதன் பின்னர் சென்னை வாசியானேன். -

நீங்கள் திரைப்படத்துறைக்கு எப்படி வந்தர்கள்:

முத்தமிழ் நிலையத்தில் நாடக நடிகனாக அறிமுக

மான நான், முத்தமிழ் நிலையம் நிறுத்தப்பட்ட

போது புதுக்கோட்டையில் தங்கி இருந்தேன். நண்பர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி என்னை ஒரு