பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv

முறையை அறிமுகப்படுத்தி மணிக்கணக்கில் மக்கள் மனத்திலே சிந்தனைச் சுடரைக் கொழுந்துவிடச் செய்தவர்.

பத்திரிகை உலகைப் பொறுத்தவரை வடஇந்தியரான பாபுராவ் பட்டேல் பிலிம் இந்தியா’ என்னும் தமது இதழில் முதன் முதல் கேள்வி-பதில் பகுதியைத் தொடங்கி: பண்டித நேரு போன்ற உலகத் தலைவர்களையே வியக்க வைத்தார். அவரது அடிச்சுவட்டில் முதன் முதல் தமிழ்: ஏட்டுலகில் தனிச்செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன். இன்று தமிழ்நாட்டின் எல்லா ஏடுகளுமே அரசியல் தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள் ஆகியோரிடம் வினாக்கள் எழுப்பி விடை களைப் பேட்டிகளாக வெளியிடுவதைப் பார்க்கிறோம்.

ஊறுகாய் இல்லாத மோர்ச் சோறு வாயின் உள்ளே இறங்காது என்பது போல, எந்த வகையிலாவது வினாவிடைப் பகுதி இல்லாத ஏடும் வாசகர்களின் வரவேற்பைப் பெறாது என்பதே நடைமுறை உண்மை. -

தானே பல ஏடுகளுக்கு 150க்கும் மேற்பட்ட பேட்டிகள் தந்திருக்கின்றேன். என்னிடம் முதன்முத்ல் பேட்டி கண்டவர் புகழ் பூத்த தமிழ் நாவலாசிரியர் ஜெகசிற்பியன். 15.5-1952 சிரஞ்சீவி மாத இதழில் அது வெளியாயிற்று. ஆனந்த விகடன் கல்கி, தினத்தந்தி, ராணி, குமுதம், குங்குமம், மாண்புமிகு அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரம், வெளியிட்ட போர்வாள்' முதலானவை என் பேட்டிகளை ஏந்தி வந்தவற்றுள் குறிப்பிடத் தக்கவை. மலேசியாவின் தமிழ்நேசன், தினமணி, வானம்பாடி, சிங்கப்பூரின் தமிழ்முரசு ஆகிய ஏடுகளும் கூட என் பேட்டிகளை வெளியிட்டுள்ளன. : -

தமிழ் நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றுக்கும் பேட்டிகள் கொடுத்திருக்கிறேன். சிறந்த எழுத்தாளர் தயாரிப்பாளர் எம்.எஸ். பெருமாள் முயற்சியால் 1988-ல் நான் அளித்த