பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடை களும் 5世。

கேள்வி :

பதில் : கேள்வி :

கேள்வி:

இலக்கியத்துறையில் நீங்கள் இயற்றிய முதல் நூல் எது?

‘சாவின் முத்தம்’ என்கிற நூல்தான்.

இப்படி தலைப்பு வைத்ததற்குக் காரணம் என்ன?

பகுத்தறிவுக் கொள்கையிலுள்ள பற்றுதல் தான் இதற்குக் காரணம். நீங்கள் எழுதிய பரிசுபெற்ற நூல் எது? தேன் மழை புத்தகத்துக்குப் பரிசு முதன் முதலாகக் கிடைத்தது. பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது, தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழக அரசு பரிசு கொடுக்கத் தீர்மானித்த போது, முதல் பரிசு பெற்ற கவிதை நூல் எனது தேன்.மழை" நூலாகும். பாரதிதாசனின் படைப்புகளைப் பொதுவுடமை ஆக்குவதாக முதல்வர் அறிவித்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பொதுவுடமை ஆக்குவது தேவை தான். ஏனெனில் பணக்காரர்கள் வாங்குவதற்குரிய பாவேந்தர் படைப்பு நூற்கள் பாமர மக்களுக்கும் கிடைக்கும். அதனால் பாவேந்தரின் பகுத்தறிவுக் கொள்கைகள் இன்னும் விரைவாகப் பாமர மக்களிடம் பரவிட

உதவி செய்யும்.

கேள்வி :

பாரதிதாசனின் நினைவுச் சொற்பொழிவுத் திட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பாரதிதாசன் நினைவுச் சொற்பொழிவு நல்ல ஏற்பாடுதான். ஆனால் நினைவுச் சொற்பொழிவு. ஆற்றுபவர்கள் முழு பகுத்தறிவுவாதிகளாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து.