பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வினாக்களும்

பாரதியைப் பின்பற்றி, பல ஆயிரம் கவிஞர்கள் எழுதி யிருக்கக் கூடும்! அவருக்கு எத்தனையோ தாசர்கள் உருவானது உண்மை! என்றாலும், புரட்சிக் கவிஞர் பாரதி தாசனைப்போல், பாரதிக்கு ஒரு தாசனும் அமையவில்லை; பாரதியின் இடத்தை நிரப்ப, பாவேந்தர் பெற்ற தகுதியை வேறு எவரும் பெறவுமில்லை.

அத்தகைய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைப் பின் பற்றியும், ஒரு புலவர் கூட்ட ம் உருவானது! அந்தக் கூட்டம், தந்தை பெரியாரின் பகுத்தறிவு வேலிக்குள்ளி ருந்து, விடுபடாத கூட்டம் அறிஞர் அண்ணாவின், சமுதாயச் சீர்திருத்த வட்டத்தைவிட்டும் விலகாத கூட்டம்!

இந்தக் கட்டுப்பாடுகளே அந்தக் கவிஞர்களின் படைப்புகள் பிரபலமாகாமல் போனதற்கு, முட்டுக்கட்டை களாக இருந்தன-என்பதும் உண்மை.

அந்த முட்டுக்கட்டைகள், இப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினும் பாரதிதாசன் வழியில், தனக்குச் சரி என்று படுகின்ற கருத்தை பட்டவர்த்தனமாகச் சொல்ல அந்தக் கூட்டம் இப்போதும் தயங்குவதில்லை.

அப்படிப்பட்ட புலவர் கூட்டம், இன்று குறுகிக் கொண்டே வருகிறது. என்றாலும் எஞ்சியவர்களில் எத்தனைபேர் பாரதிதாசன் பெயரை நிலைநாட்ட வல்லவராக உள்ளார்கள் என்று பார்த்தால் கவிஞர் சுரதா வின் பெயரே முதலில் நினைவுக்கு வருகிறது.

சுரதாவின் படைப்புகள், சுயமரியாதைக் கருத்துக்கு உட்பட்ட பாடல்கள் மட்டுமல்ல! "யாப்பிலக்கணம்’ என்னும், தனித்தமிழின் பாட்டிலக்கணத்துக்கும் அவை உட்பட்ைேவயாகும்.

இலக்கண வரம்புக்கு உட்பட்டு, இலக்கியம் படைக்கும் அளவுக்குத் தகுதியுள்ள கவிஞர்கள், இன்று தமிழ்நாட்டில் மிகச் சிலரே உள்ளனர்; அந்தக் குறைந்த பட்டியலில்