பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 61

'ஒடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்ப ராகிவிட்டால் ஒர்நொடிக்குள் ஒடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி, ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப் பாநீ!’

கேள்வி : பாரதியாரைவிட பாரதிதாசன் எந்த வகையி

பதில் :

லாவது சிறந்தவர் என்று கருத முடியுமா?

பல வகைகளில், பாரதியை விட பாவேந்தர் உயர்ந்து நிற்கிறார் என்பதே என் கருத்து. பாவேந்தரின் பாடல்களைச் சரியான முறையில் மொழி பெயர்த்தால், அவருடைய அறிவை மேல் நாட்டவர்களும் ஒப்புக் கொள்வார்கள் என்பது 恐_6ö了6ö》琶D。 பாவேந்தரின் கவிதைகளை இப்போது தாகூர் உயிருடன் இருந்து அவரிடம் காட்டினால் கூட் ‘என்னைப் போல் ஒருவன் எழுதியுள்ள கவிதை' என்றுதான் தாகூர். குறிப்பிடுவார், இப்போது பாரதியாரே இருந்தால்கூட தன்னைவிட பாவேந்தர் உயர்ந்த கவிஞர் என்பதை அவர் ஒப்புக் கொள்வார்.

கேள்வி : புதுக்கவிதைகள்' என்ற பெயரில் வெளிவரும்

பதில் :

வசன நடைக் கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வரலாற்றில் வடிவம் இல்லாத எதுவும் மனிதனின் மனத்தில் நிற்பதில்லை. ஒரு பெண், அழகா யிருந்தால்தான் எவனுடைய மனத்திலாவது நிற்பாள்.

அவளிடம் உணர்வுகள் இருந்தால்தான் ஒருவனுடன் வாழப் பொருத்தமானவளாகவும் இருப்பாள். எல்லோருக்கும் புருவம் வளைந்துதான் இருக் கிறது. ஆனால் எது அழகாக இருக்கிறதோ, அதுதான் தனித் தன்மை பெறுகிறது. -