பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. சுரதாவின் விடைகளும் 6ត

கேள்வி :

பதில் :

போல அளவில் பெரிதாக இருக்கும் உரைநடை வடிவங்களான சிறுகதை, .ெ ந டு ங் க ைத, கட்டுரை முதலானவை படிக்கும்போது இன்பம் தருபவை. மற்றநேரத்தில் பெரும்பாலும் அவை பயன்படுவதில்லை. ஆனால் கவிதை அவ்வாறல்ல. கைக்கடிகாரம் மாதிரி அளவில் சிறிதாக அமைந்து சுவர்க் கடிகாரம் தரும் அத்தனை பயன்களையும் தரும். அதுமட்டுமல்ல! கையில் இருந்துகொண்டு எந்த நேரத்திலும் பயன்படும். கைக்கடிகாரம் போல கவிதை நெஞ்சத்திற்குள் எந்த நேரமும் நின்று நிலைத்து இன்பம் தரும்.

கவிஞன் பிறக்கிறான்; உருவாக்கப்படுவதில்லை என்னும் கருத்தை ஏன் மறுக்கிறீர்கள்?

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்னும் குறள் இதற்குத் தகுந்த சான்று என்று கருதுகிறேன். பிறப்பு எல்லோருக்கும் ஒன்றுதான். செய்கின்ற தொழில்களால்தான் அவரவர் சிறப்புகள் ஒன்று படுவதில்லை. கவிதை என்னும் தொழிலைச் செய்வதால் ஒருவன் கவிஞன் எனப்படுகிறான். 'எமக்குத் தொழில் கவிதை' என்ற பாரதியின் கருத்தை உணர வேண்டும். 'க வி ஞ ன் பிறக்கிறான்’ என்பது தன்னை உயர்த்துவதற்கு யாரோ ஒரு கவிஞன் விட்ட சரடாக அல்லது ஒரு கவிஞனை உயர்த்த அவனுடைய தீவிர ரசிகன் அள்ளிவிட்ட கதையாக இருக்க வேண்டும்.

பாரதியார்தான் எளிமையான கவிதைக்கு

முன்னோடி என்கிறார்களே?

அதை நான் ஏற்கவில்லை. பத்தாவது நூற்றாண்டி லிருந்தே எளிமையான கவிதைகள் வரத் தொடங்க விட்டன. கவிதையை எளிமைப்