பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 6了

கேள்வி :

பதில் :

கேள்வி :

கேள்வி :

பதில் :

எடுத்தாள்வது, காப்பியடிப்பது இரண்டுக்கும். உள்ள வேறுபாடு என்ன? - - ஒருவரது கருத்தைக் கூறி அந்தக் கருத்தின் மூலம் தனக்குத் தோன்றிய புதுக் கருத்துகளை கூறும்போது எழுத்தாளன் எடுத்தாள்கிறான் என்று பொருள். ஒருவரது கருத்தை அப்படியே கூறிவிட்டு அதைப் பற்றி வேறொன்றும் கூறாமல் இருக்கும்போது எழுத்தாளன் காப்பி அடித்திருக் கிறான் என்று பொருள். காப்பி அடிப்பது குறைய வேண்டுமானால் அதிகமாகப் படிப்ப தோடு படிப்பதை நினைவில் வைத்திருக்கும். ஆற்றல் பெற்ற வாசகர்கள் உருவாக வேண்டும். இப்படிப்பட்ட வாசகர்களால்தான் ஒரு கதையோ கவிதையோ காப்பியடிக்கப்பட்டுள்ளதை உடனடி யாகக் கண்டுபிடிக்க முடியும்.

சிலப்பதிகாரத்தை தினத்தந்திக்குரிய ஒரு செய்தி' என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே! ஆமாம், இன்று அந்தச் செய்தி நடந்தால் தினத்தந்திக்கு முதல் பக்கச் செய்தியாக இருக்கும். அந்தச் செய்தியையே அருமைமிக்க ஒரு காவியமாக்கியிருக்கும் போதுதான் இளங் கோவின் ஆ ற் ற ல் வெளிப்பட்டிருக்கிறது. என்னிடம் கூட சாதாரண செய்திகளைக் கவிதையாக்கும் பழக்கம் உண்டு.

எங்கள் கவிஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது?

கல்வி செழித்தால் கவிதை வரும். கவிஞர்கள் நூல்களைப் படிக்கக் கூடாது; கற்க வேண்டும். படித்தால் படித்ததை அப்படியே பரீட்சைக்கு. எழுதுவது போல் காப்பி அடிக்கத்தான் முடியும்.