பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வினாக்களும்

தமிழகத்தின் முதல் தேசியக் கவி பாரதியார் என்று கூறுகிறார்கள். ஆனால் 1877-ஆம் ஆண்டு ராமசாமிராஜூ என்பவர் எழுதிய பாக்களைக் கொண்டு அவரைத்தான் முதல் தேசியக்கவி என்று கூறலாம் என்றும் கவிஞர் சுரதா கூறுகிறார்.

கண்ணகியின் வரலாற்றைக் கூறும் சிலப்பதிகாரம் ஒரு தினசரி பத்திரிகைக்குத் தேவையான பரபரப்பான தகவலே தவிர வேறொனறும் இல்லை என்றும் இவர் கூறுகிறார்.

ஒரு கவிஞன், தான் இயற்றும் பாடலுக்காக உழைத்து மன உணர்ச்சிகளை வெளிப்படுத்த வெண்டும். தெளிந்த அறிவும் கடின உழைப்பும் ஒழுக்கமும் இருந்தால் கவிஞன் வெளிப்படுத்தும் சொற்கள் காலத்தால் அழியாது நிற்கும்.

தெய்வப் பாடல்களைத் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பற்றிப் பாடிய முதல் கவிஞர் பூவை கல்யாண சுந்தரம் என்பாரைப் பற்றிக் குறிப்பிடலாம். சென்னைக்கும் செங்கற்பட்டுக்குமிடையில் தமிழகத்தில் முதலில் ஒடிய ரயிலைப் பற்றி இவர் பாடி இருக்கிறார்.

ஆழமற்ற சிந்தனை நம்மவர்கள் எந்த விஷயத்தையும் ஆழமாகப் பார்ப் பதில்லை. இது நமது சமூகத்தின் பெரிய குறையாகும். தொட்டனைத் தூறும் மணற்கேணி என்பதாகத் தான் இருக்கிறார்கள்.

'நமக்குக் குடிநீர் மட்டும் கிடைத்தால் போதும்’ என்று திருப்தி அடைந்து விடுகிறோம். தண்ணிருக்கும் கீழே என்ன இருக்கும் என்று ஆராய்ந்தவன் பெட்ரோலைத் தோண்டி எடுத்து விட்டான் என்றும் இவர் கூறுகிறார்.

எழுத்தாளர்கள் பண்டைய இலக்கியங்களைப் படித்து அவற்றில் காணப்படும் வார்த்தைகளுக்குப் பொருள் புரிந்து கொண்டால் அவற்றைத் தங்கள் படைப்புகளில்