பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரதாவின் விடைகளும் 71

பயன்படுத்தி நடைமுறைத் தமிழாக்கலாம். இதனை எழுத்தாளர்கள் தங்கள் கடமையாகச் செய்ய வேண்டும்.

ஒருவர், தான் கவிபுனைய விரும்புவாரானால் அவருக்கு முதலில் 40 முதல் 50 பாடல்கள் மனப்பாடமாகத் தெரிய வேண்டும் என அவர் சொன்னார்.

புதுக்கவிதைகள்

புதுக்கவிதைகள் என்ற பெயரில் இப்போது வெளியாகும் அம்சங்கள் கால ஓட்டத்தில் மறைந்துவிடும் என்று இவர் நிச்சயமாக நம்புகிறார்.

கலைஞர் கருணாநிதி கவிதைகளைப் போல் எழுதும் அம்சங்கள் கவிதைகள் அல்ல. அவை இலக்கண மரபற்றவை. பு து க் க வி ைத பாணியிலான எளிய மொழியறிவாளர்கள் பொருள் புரிந்து கொள்ள உதவுமே தவிர வேறு வகையில் பயன்படாது என்றும் கவிஞர் சுரதா கூறுகிறார்.

பத்திரிகைகள்

தமிழகத்தில் பிராமணர் அல்லாதார் நடத்தும் பத்திரிகைத் தொழில்கள் வளமற்றிருப்பதற்குக் காரணம் அவர்கள் இரண்டாந்தர அறிவுடையவர்களாக இருப்பதே என்றும் இவர் கூறுகிறார். போதிய முதலீடுகள் இல்லாமலும் திட்டமில்லாமலும் பிராமணர் அல்லாதார் பத்திரிகைகளைத் தொடங்குகின்றனர். -

மேலும் இவர்கள் எழுத்தாளனுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் எதுவும் இல்லாதவர்கள். இந்த நிலையில் பிராமணர்கள் நடத்தும் பத்திரிகைகளுக்குக் கிடைக்கும் அளவுக்குத் தரமான விஷயங்களைப் பெற முடிவதில்லை.

அதே நேரத்தில் பத்திரிகைத் தொழிலின் அனுபவம் இன்மை போன்றவையும் இவர்களது வீழ்ச்சிக்குக் காரண மாகின்றன.