பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதாவின் விடைகளும் 73

கேள்வி : தமிழகத்திலிருந்து வருகை தரும் இலக்கிய

வாதிகளைப் போல் நீங்களும், சொற்பொழிவு, இலக்கியக் கூட்டமென சென்று விடுவீரா அல்லது மாற்றுக் கருத்து ஏதும் கொண்டுள்ளீரா என்பதைச் சொல்லவியலுமா?

இந்நாட்டு மக்களின் வாழ்வு முறைகளைக் கருத்துான்றிக் கவனிப்பதோடு, இங்கு இதுகாரும் வெளிவந்துள்ள நாளேடுகள் மற்றும் இலக்கிய இதழ்களின் படைப்பினைக் கொண்டு:போய் ஒரு திறனாய்வு செய்கின்ற நோக்கம் உண்டு. பலர், நாளேடுகளைத் தவிர்த்து நூல்களை ஆய்வு செய்வதில் பெருநோக்கம் காட்டுவர். ஆனால் நான் அப்படியல்ல. அதற்குக் காரணம் ஏடுகளை

நடத்தியவர்களே நூல் வெளியீட்டாளர்களைக் காட்டினும் நிறைய சாதித்துள்ளனர். அதில்தா

பல கவிஞர்களும், அறிஞர்களும், எழுதுகின்இ எழுத்துப் படிவங்கள் வெளிவருவதைக் காண முடிகிறது.

அத்தோடு இந்நாட்டில் வாழ்கின்ற வாழ்ந்த கவிஞர்களின் பட்டியல் ஒன்றினையும் நான்

எடுத்துச் செல்ல விருக்கிறேன்.

எந்த விருத்தத்தை தாங்கள் விரும்பிப் பாடுவீர் என்ற கேள்விக்கு திரு. சுரதா அவர்கள்:

இன்ன விருத்தம் என்று பாகுபடுத்திப் பாடுவது கிடையாது என்கிறார். -

1941-ஆம் ஆண்டு துவங்கி கடந்த 38-ஆண்டுகளாகக் கவிதைகள் பாடிவரும் சுரதா அவர்கள் தனது பள்ளிப் பருவத்திலேயே பாட்டியற்றத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார். -

வி-5