பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரதாவின் விடைகளும் 77

கேள்வி : கவிதையைப் படைப்பதென்பது சூல்கொண்டு

பிரசவிப்பது போல் வேதனையும் மகிழ்ச்சியும் தரக்கூடிய ஒன்றென்று, ஒப்பு நோக்கப்படுவதில் தங்களுக்கு ஏதேனும் மாறுபட்ட கருத்து உண்டா?

இல்லை நான்தான் இதையும் சொல்லிக்கொண்டு வருகிறேன். மீதிப் பேரெல்லாம் அயோக்கியத்தன மாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். நல்ல கவிதை என்பது ஆய்வுக்குப் பிறகு வரவேண்டிய ஒன்று. அவசரமாக வருகிற தென்றால், ரொம்பக் குறைந்த அறிவுடைய மக்களை ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள் என்று

பொருள். அவனுக்கு அவனே மறுநாள் உயர்ந்

திருக்க வேண்டுமல்லவா? மற்றவனுக்கு இன்றைய என் கவிதை சிறந்ததாய் இருக்கலாம். ஆனால் மறுநாள் எனக்கு நானே அறிவுள்ளவனாக இருக்கவேண்டும். இன்னும் சிறந்ததைப் படைக்க வேண்டுமென்றால் குறைந்த அறிவுள்ளவனுக்குக் .ெ க ட் டி க் க | ர ன ா யி ருக்கிறதைவிட இன்னும் சிந்தனையை உயர் த் தி க் .ெ க | ள் ள வேண்டு மென்று பார்க்கையில், இது பிரசவ வேதனை தான். என்னைப் பொறுத்தவரையில், நான்தானே தமிழகத்தில் ரொம்ப நுட்பமா, நுணுகி மெதுவாய் எழுதுபவன். அந்த விதத்தையும் மாற்றிக்

.ெ கா ன் ேட ன். பிரெஞ்சு நாட்டில் 16-ம். நூற்றாண்டில் லரோஸ் புக்கோ’ என்ற ஒருவன் இருந்தான். அவன்தான் நானறிந்த அளவில் எட்டு ஒன்பது தடவை தானெழுதிய கவிதையைத் திருத்தியிருக்கின்றான். கவிதையை எழுதிய உடனேயே ஆறு அல்லது ஏழு தடவை அடித்துத் திருத்தி எழுதுவானாம். நான்தான் இதைச் செய்திருக்கிறேன் என்று பார்த்தால், அவன்தான் முன்னோடி என்று எனக்குத் தெரிகிறது.