பக்கம்:வினாக்களும் சுரதாவின் விடைகளும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

한 2 வினாக்களும்

தம். நீண்ட காலத்திற்கு ஒருவனை மதிப்பதென் பது சரியல்ல. மதித்தால் நாமேசெய்ய முடிந்த ஒன்றை, அவனிடம் ஒப்படைத்து விட்டோம். என்று அர்த்தமல்லவா?

கேள்வி : சக்திமிக்க எந்தப் படைப்பாளனும் தனக்குப் பின், சிலரை நேரடியாகவோ, தனது படைப்புக் களின் வாயிலாகவோ உருவாக்கியே தீருவான். இந்தக் கண்ணோட்டத்தில் நீங்கள் ஊக்க மூட்டியோ, வளர்த்தோவிட்ட இளங்கவிஞர்களைப் பற்றியும், அவர்களின் இன்றைய வளர்ச்சியையும். தெரிவிக்க இயலுமா?

பதில் : இன்று இருக்கிற அத்தனை பேரும் என்னைப் பின் பற்றி எழுதுபவர்கள் மட்டுமல்ல, எனது ஊக்கத்தாலும் வளர்ந்தவர்கள். இப்போது இருக்கும் வல்லம் வேங்கடபதி, மின்னூர் சீனிவாசன், எழில் முதல்வன், பொன்னி வளவன், வேழவேந்தன், காமராசன், அப்துல் ரகுமான், இன் குலாப், இன்னும் பலர்...நான் நடத்திய வராந்திரக் கவிதை ஏட்டில் எழுதி அறிமுகமான வர்கள் தாம், -

கேள்வி : தமிழ்க் கவிஞன் காதல், தமிழ், வீரம், பக்தி, முக்தி என்ற கருப்பொருள்களில் பாடுபவன் என்ற பொது அபிப்பிராயம் நிலவுகிறது. உங்கள் படைப்புகள் வழியாக இவற்றைநீக்கி, உங்களுக்கே உரிய, தனிப்பட்ட வாழ்க்கைநோக்கு எதையும் இது வரை உணர்த்தியிருப்பதாக நம்புகிறீர்களா? அல்லது இனிமேல் வெளிப்படுத்த வேண்டுமா?

பதில் : எப்பொழுதும் எனக்குப்பட்டதையே சொல்லி யிருக்கிறேன். நான் ஒரு கவிஞன். அதைவிட நான் ஒரு நல்லவன் இந்த நாட்டிலே’ என்று எழுதியிருக்கிறேன். அதைக் கூட துறைமுகம்’